பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் ஊக்கத்தொகை உயர்வு
Posted by: Madras Medical College on: July 17, 2009
சென்னை :
15 நாள் பேராட்டத்துக்கு பிறகு பயிற்சி மருத்துவர்கள் நேற்று போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இதனையடுத்து சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் சுகாதார துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிக்கை வாசித்தார். அப்போது அவர் இதை தெரிவித்தார். பயிற்சி மருத்துவர்களுக்கும், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை அதிகரித்து அளிக்கப்பட்டுள்ளது.
- பயிற்சி மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை 6000 ரூபாயில் இருந்து 7000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
- முதலாம் ஆண்டு முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு 15,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
- இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு 16,000 ரூபாயாகவும்,
- மூன்றாம் ஆண்டு முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு 17,000 ரூபயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
- சிறப்பு முதுகலை மருத்துவப் படிப்பு படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 18,000 ரூபாகவும் , எம்.சி.எச். படிக்கும் மருத்துவர்களுக்கு ஏற்கனவே ரூ. 10 ஆயிரம் என்று இருந்தது. இனி ரூ. 18 ஆயிரம் என்றும்
- இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்ககு 19,000 ரூபாகவும், எம்.சி.எச் 5-ம் ஆண்டு மருத்துவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் என்று இருந்தது. ரூ. 19 ஆயிரம் என்றும் உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
- மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு 20,000 ரூபாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Recent Comments